'துருவ நட்சத்திரம்', நடிகர் சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் குறைந்த கால அவகாசத்தில் பட பூஜைகள் எல்லாம் போட்டு, ஷூட்டிங்கிற்கு கிளம்ப இருக்கிறார்கள்.
இப்படத்தில் முதன் முறையாக பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமன்றி சிம்ரன், 'பில்லா 2' சுதன்ஷு பாண்டே ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமன்றி சுமார் 12 முன்னணி நட்சத்திரங்களை இப்படத்தில் நடிக்கவைக்க இருக்கிறார் கெளதம். படத்தின் நாயகி தேர்வு படலம் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கான நாயகிகள் போட்டியில் த்ரிஷா மற்றும் அமலா பால் இருவருமே முன்னணியில் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஒப்பந்தமானாலும் ஆச்சர்யத்திற்கு இல்லை என்கிறது கோலிவுட்.
கெளதம் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே ’காக்க காக்க’, ’வாரணம் ஆயிரம்’ படங்களில் நடித்துள்ளார். அப்போது கெளதம் சொல்லை எப்போதும் மீறமாட்டார், இயக்குனர் சொல்வதை அப்படியே செய்வார் என்று கூறுகிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.
ஆனால் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஒளிப்பதிவாளராக யாரையும் கெளதம் புக் செய்யாத நிலையில் தனுஷின் ’மரியான்’ படத்தில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் மார்க் கோனின்க்ஸை இந்த படத்தின் ஒளிப்பதிவாளராகவும் புக் செய்ய சொல்லி கெளதமை சூர்யா வலியுறுத்தி வருகிறாராம்.
மரியான் படத்திற்கு மார்க் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதால் பட்ஜெட் பிரச்னையில் சூர்யாவிற்கு ஓ.கே சொல்லாமல் தவிக்கிறாராம் கெளதம்.